SIVA BRANCH REAL MARTIAL ARTS SCHOOL

Full Contact Martial Arts Karate-Do Federation
Karate practice is essential for increasing immunity, keeping the body and
mind healthy, and developing self-confidence. Anyone can practice
karate at any age.
Contact Us:
+919442835807
Follow Us:

About

Siva Branch Real Martial Arts School
Kyokushin Siva Branch Martial Arts & Sports School is promoted by
Sensei V.Sivanandham BA. DME(Branch Chief Of IKAK India, Chairman of Fc MAK Federation, India) at Salem.
We work hard to provide excellent customer service to all our clients. We run a traditional karate school,
Kyokushinryu Karate India International, and we produce the best-talented students needed for the world of Karate.
We teach total body training, physical strength, mental strength, meditation, breathing exercises, self-confidence,
concentration of mind, sports excellence, unarmed self-defense training.
ஜலகண்டபுரத்தில் 2000 ஆண்டு முதலே கியோகுஷின் கராத்தே செயல்பட்டு வருகிறது. மேலும் அருகிலுள்ள
சவுரியூர், வனவாசி, நங்கவள்ளி, மேச்சேரி, குஞ்சாண்டியூர், மேட்டூர், பூலாம்பட்டி, கலர் பட்டி, போன்ற
பல நகரங்கள் மற்றும் கிராமங்களில் மாணவ மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு
சிறப்பான முறையில் பயிற்சி அளித்து பல மாநில மற்றும் தேசிய மற்றும் ஆசிய போட்டிகளில் வெற்றி
பெற செய்துள்ளோம். குறிப்பாக பெண்குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தற்காப்பில் முழு கவனம் செலுத்தி
உடலையும் மனதையும் வலிமை பெற செய்து சமுதாயத்தில் சிறந்த தைரியமான
பெண்களை உருவாக்கி வருகிறோம்.
மேலும், எங்கள் மாணவ மாணவிகளுக்கு,
1.கியோகுஷின் கராத்தே 極真空手 (Full Contact):


Masutatsu Oyama -Founder of Kyokushin karate

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல உயிர் என்று ஊர் சொல்ல வேண்டும்.
-கண்ணதாசன்

வீரத்தில் மனிதனை சிங்கத்துடன் ஒப்பிட நேர்ந்தால் கடந்த நூற்றாண்டில் உங்களால் ஒரே ஒருவரை தான் தேர்வு செய்ய இயலும். அது வேறு யாருமல்ல kyokushin கராத்தே கலையை உருவாக்கிய மாஸ் ஒயாமா-வாகத்தான் இருக்கக்கூடும்.
1923 ஜூலை மாதம் 27-ம் தேதி பிறந்த ஒயாமா டோக்கியோவில் 1994-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி தனது 70-வது வயதில் காலமானார். உலகில் உள்ள பத்திரிகைகள் அனைத்தும் அவர் வாழ்ந்த காலத்தை சிறப்பாக படம் பிடித்து காட்ட தவறியதில்லை.நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை Strongest Man on Earth என்ற பட்டத்தை அழித்து அவருக்கு புகழாரம் சூட்டியது. கராத்தே என்ற வார்த்தையை வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் என்பதும், ஒயாமா தமிஷிவாரி (Tameshiwari - Breaking) மற்றும் நாக்டவுன் சிஸ்டத்தையும் உருவாக்கி அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அன்று உலகம் முழுவதும் சுமார் 10 மில்லியன் மாணவர்கள் சுமார் 140 நாடுகளில் ஒரே கிராண்ட் மாஸ்டரின் கீழ் பயின்று ஆதிக்கம் செலுத்தினர் என்பது மறுக்கமுடியாத உண்மை.

மாஸ் ஒயாமா ஒரு சிறந்த வெல்ல முடியாத வீரராகவே தன் வாழ்நாளில் திகழ்ந்தார். அவரை வெல்வதற்காக மோதியவர்கள் எண்ணிக்கை 250. கராத்தேகா, ஜூடோகா, பாக்ஸர்கள், மல்யுத்த வீரர்கள் என பல்வேறு வீரர்கள் அவரிடம் மோதி தோல்வியை தழுவினர்.

மேற்கண்ட 250 பெர்களையும் ஒயாமா நாக் அவுட் செய்தே வென்றுள்ளார் என்பது தனிச்சிறப்பு. மேலும் 300 பேர்களுடன் 3 நாட்கள் தொடர்ந்து இடைவிடாது மோதி தன்னுடைய ஃபேவரட் தொழில்நுட்பமான கியாக்குசூகி (ரிவர்ஸ் பஞ்ச்) மற்றும் ஜோடான் மாவஷி கேரி ஆகிய இரண்டை மட்டுமே பயன்படுத்தி நாக்அவுட் செய்து வென்று காட்டினார் என்பது உலக மகா சாதனையாக கருதப்படுகிறது.

'என் பலத்திற்கு முன் இவ்வுலகில் எவையும் நிகரல்ல' என்பதை நிரூபித்து காட்டுவதற்காக 53 காட்டெருமைகளுடன் மோதி அவற்றின் 3-ஐ ஒரே ஒரு பஞ்சில் கொன்று காட்டியவர். இவை மட்டுமல்லாது மரப்பல்லகைகள், பாறைகள் என அனைத்தையும் உடைத்து காட்டி உலகே வியக்கும் அளவுக்கு தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர்.

மாஸ் ஒயாமா Za Zen என்றழைக்கப்படும் Zen மதக் கோட்பாடுகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். மனதை கட்டுப்படுத்தி ஆற்றலை வெளிப்படுத்தும் கொள்கை Zen மதக் கோட்பாடுகளில் இருப்பதாக அவரது நம்பிக்கை. Zen மதம் மட்டுமின்றி இசைத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இசையையும், கராத்தேவையும் ஒருங்கிணைத்து இவை இரண்டும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றது என்று கூறி புது கோட்பாட்டை வகுத்தவர்.

அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. சுமார் 40-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் 'This is Karate', 'what is Karate', 'advanced karate' ஆகிய நூல்கள் உலகப்புகழ் பெற்றவை. அவர் வாழ்ந்த காலத்தில் அவரிடம் கராத்தே கற்றுக் கொள்ள உலகத்தில் உள்ள V.I.P. -க்கள் அனைவரும் போட்டியிட்டனர். உலக சூப்பர் ஸ்டார் ஜேம்ஸ்பாண்ட் புகழ் சின் கானரி ஓயாமாவிடம் 3-வது கருப்பு பட்டை பெற்ற மாணவர்.

இவரை தவிர பிரபல ஹாலிவுட் நடிகர் Dolph Lundgren, சவுதி அரேபிய இளவரசர், ஜோல்டன் நாட்டு மன்னர், ஸ்பெயின் நாட்டு இளவரசர், நேபாள நாட்டு மன்னர் திஹேந்திரா மற்றும் அவரது மகன் என பல வி.ஐ.பி-க்கள் ஒயாமாவின் மாணவர்கள் என்பதை பெருமையாகக் கூறலாம். சென்ற நூற்றாண்டில் கராத்தே என்ற சொல்லிற்கே புது இலக்கணம் வகுத்துத்தந்த அம்மேதையை அவருடைய நினைவு நாளான ஏப்ரல் 24-ஆம் தேதி போ செய்து வணங்குவோம்.
2. டேக்வாண்டோ テコンドー ( Semi Contact )
கொரிய மொழியில், TAE என்றால் கிக், KWON கை தாக்குதல் என்று பொருள், மற்றும் DO என்றால் கலை. அதாவது, அது இருக்க முடியும் பொதுவாக வேலைநிறுத்தம் மற்றும் கலை என்று கூறப்படுகிறது கால்கள் மற்றும் கைகளைப் பயன்படுத்தி எதிரியை செயலிழக்கச் செய்தல். மற்ற தற்காப்புக் கலைகளைப் போலவே, இது அடக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது எதிரி, தற்காப்புக்காக, விளையாட்டாக உடற்பயிற்சி, மற்றும் பொழுதுபோக்குக்காக.

நிறுவனர் பெயர்:-சோய் ஹாங்-எச்
பிறப்பு: நவம்பர் 9, 1918, ஹவாடே, வட கொரியா
இறப்பு: 15 ஜூன் 2002, பியோங்யாங், வட கொரியா
3. ஸ்போர்ட்ஸ் கராத்தே スポーツ空手 (Non Contact):
பயிற்சியின் போது மாணவர்கள் ஒருவரையொருவர் அடிக்கவோ உதைக்கவோ கூடாது என்பதே இதன் பொருள். கற்பித்தல் கட்டுப்பாடு தவிர, இது பாதுகாப்பான கற்றல் சூழலை உருவாக்குகிறது. மூக்கில் குத்துதல் மற்றும் இடுப்பு, தொண்டை மற்றும் கண்களைத் தாக்குதல் போன்ற தொடர்பு சூழ்நிலையில் பாதுகாப்பாக செய்ய முடியாத நுட்பங்களை இது செயல்படுத்துகிறது.
4. குத்துச்சண்ட:
ஒரு சண்டை விளையாட்டு. ஒரே எடைத்தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துச்சண்டை ஆகும். ஒருவர் அடித்துத் தனது எதிரியை வீழ்த்திவிட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பாவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். போட்டியின்போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியிட முடியா நிலைமை வந்தாலும் எதிர்த்து நின்ற மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவார். இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்து நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவார். குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.
5. கிக் பாக்ஸிங் :
கிக் பாக்ஸிங் ( / ˈkɪkbɒksɪŋ / KIK - boks - ing ) என்பது ஒரு முழு - தொடர்பு கலப்பின தற்காப்புக் கலை மற்றும் குத்துச்சண்டை வகையாகும் . கிக் பாக்ஸிங் 1950 முதல் 1970 வரை உருவானது.
சண்டையானது குத்துச்சண்டை வளையத்தில் நடைபெறுகிறது , பொதுவாக குத்துச்சண்டை கையுறைகள் , வாய் காவலர்கள் , ஷார்ட்ஸ் மற்றும் வெறுங்காலுடன் உதைகளைப் பயன்படுத்துவதற்கு சாதகமாக இருக்கும். கிக் பாக்ஸிங் தற்காப்பு , பொது உடற்தகுதி அல்லது போட்டிக்காக பயிற்சி செய்யப்படுகிறது.
கிக் பாக்ஸிங்கின் சில பாணிகளில் பின்வருவன அடங்கும்: முழு தொடர்பு கராத்தே , முவே தாய் , ஜப்பானிய கிக் பாக்ஸிங் , லெத்வே , சாண்டா , மற்றும் சவேட் .
ஆகிய தற்காப்பு கலைகளின் விதிமுறைகளும் மேலும் கராத்தே
சிலம்பம் மற்றும் யோகா பயிற்சியும் கூடுதலாக வழங்குகின்றோம்.
தகுதியும் திறமையும் உள்ள பயிற்சியாளர்களை கொண்டு ஜப்பானிய மொழியில் பயிற்சி
வகுப்புகளை நடத்தி வருகின்றோம்.
பயிற்சி நடைபெறும் இடம் மற்றும் நாட்கள்:
View more
நாங்கள் இன்டர்நேஷனல் கியோகுஷின் கராத்தே கூட்டமைப்பு, இந்தியாவில் நடத்துகின்றோம்.
கராத்தேவுக்குத் தேவையான சிறந்த திறமையான மாணவர்களை உருவாக்குகிறோம். உடற் பயிற்சியாளருக்கு
மாணவர்களை தயார்படுத்தி வெற்றிபெறச் செய்கிறோம்.
நாங்கள் முழு உடலுக்கான பயிற்சி, உடல் வலிமை, மன வலிமை, தியானம், மூச்சு பயிற்சி, தன்னம்பிக்கை,
மனதை ஒருநிலைப்படுத்துதல், விளையாட்டுகளில் சிறந்து விளங்க, ஆயுதம் இல்லாத தற்காப்பு
பயிற்சி இவைகளை அனைத்தையும் கற்றுத் தருகிறோம்.
கராத்தேக்குத் தேவையான அனைத்து உடற்பயிற்சிகளையும் சிறந்த முறையில் கற்றுத் தருகிறோம்.
நாங்கள் திறமையான மற்றும் தகுதியான மாணவர்களை உருவாக்குகிறோம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைத்திட
தன்னம்பிக்கையைஅதிகம் வளர்த்த கராத்தே பயிற்சி அவசியம் தேவை. எந்த வயதிலும், யார் வேண்டுமானாலும்
கராத்தே பழகலாம்.
சிறந்த சேவையை எங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம்.
Terms & Conditions | Privacy Policy © 2023 sivabranch.in